×

‘மேட் இன் இந்தியா’வுக்கு கூடுது மவுசு; டிக்டாக் ஆப்புக்கு சிங்காரி வைத்த ஆப்பு: 1 லட்சம் பேர் பதிவிறக்கம்

புதுடெல்லி: எல்லோரையும் கட்டிப்போட்ட சீன ஆப்பான டிக்டாக்குக்கே ஆப்பு வைத்திருக்கிறது ‘மேட் இன் இந்தியா’ ஆப்பான சிங்காரி (Chingari). குறுகிய காலத்தில் 1 லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து, டிக்டாக்குக்கு குட்பை சொல்லியுள்ளனர். குறும் வீடியோ மூலம் நமது திறமையை உலகுக்கு எடுத்துக் காட்ட வழிவகுத்து தந்ததுதான் டிக்டாக் ஆப். உலக நாடுகளைப் போல இந்தியாவிலும் டிக்டாக் ஆப் வந்த வேகத்தில் படுபிரபலமானது. வீடியோ சேரிங் செய்யும் ஏராளமான ஆப்கள் இருந்தாலும், டிக்டாக்கை அசைத்து பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், ெகாரோனாவுக்கு மூல ஆதாரமாக இருந்தது மற்றும் சமீபத்தில் லடாக் எல்லையில்  வாலாட்டியதால், இந்திய மக்களிடம் சீனாவுக்கு எதிரான மனநிலை காட்டுத்தீ போல பரவியது. சீன பொருட்கள் குறிப்பாக சீன ஆப்களை புறக்கணிப்போம் என்ற கோஷம் நாடு முழுவதும் படுவேகத்தில் பரவியது. இதன் தாக்கம் டிக்டாக்கையும் விட்டு வைக்கவில்லை. டிக்டாக்குக்கு போட்டியாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிங்காரி வீடியோ சேரிங் ஆப் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இதை சுமார் 1 லட்சம் பேர் வரை சிங்காரியை பதிவிறக்கம் செய்து, டிக்டாக்கை நீக்கி உள்ளனர்.

டிக்டாக் போலவே சிங்காரியிலும் வீடியோவை சேர் செய்யலாம். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கலாம். இதில் பதிவிடும் வீடியோ மூலம் சம்பாதிக்கவும் செய்யலாம். இந்த ஆப்பின் துணை நிறுவனரான பிஸ்வத்மா நாயக் கூறியதாவது: உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற முழக்கத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் சிங்காரி. வெளிநாட்டு ஆப்களுக்கு சிறந்த மாற்று இது. பிற நாட்டு ஆப்களை போல் அல்லாமல் இது முழுக்க முழுக்க இந்திய பயனர்களுக்காக அவர்களின் தேவை அறிந்து உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறு பிஸ்வத்மா நாயக் கூறினார்.

இங்கே கெட்அவுட் அங்கே கட்-அவுட்
கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை இந்தியாவில் டிக்டாக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்த ஆப்பை பதிவிறக்கியவர்கள் எண்ணிக்கை 3.57 கோடியிலிருந்து 1.7 கோடியாக சரிந்துள்ளது. இது 51% சதவீதமாகும். இதனால் டிக்டாக் நிறுவனம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதே சமயம், உலகளவில் டிக்டாக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 11.9 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பு வளர்ச்சியாகும்.

Tags : India , Mouse , India; Singarii Tikku Pendant,1 lakh Download
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...